கூடங்குளம் அணு உலைகளை முற்றிலும் கைவிடக்கோரி இடிந்தகரையில் வருகிற 1 ந்தேதி எழுச்சி மாநாடு || koodankulam nuclear power plant idinthagarai struggle
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
  • ஜம்மு காஷ்மீரில் தொடர் மழை : ஸ்ரீநகர் உட்பட 7 மாவட்டங்களி்ல் வெள்ள அபாய எச்சரிக்கை
  • சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான கெடு நாளையுடன் முடிகிறது
  • ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை
  • நாளை நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது
  • பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவு
கூடங்குளம் அணு உலைகளை முற்றிலும் கைவிடக்கோரி இடிந்தகரையில் வருகிற 1-ந்தேதி எழுச்சி மாநாடு
கூடங்குளம் அணு உலைகளை முற்றிலும் கைவிடக்கோரி இடிந்தகரையில் வருகிற 1-ந்தேதி எழுச்சி மாநாடு
நெல்லை, ஜூன்.28-

கூடங்குளம் அணுஉலைகளை முற்றிலும் கைவிடக்கோரி இடிந்தகரையில் வருகிற 1-ந்தேதி எழுச்சி மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடுப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இடிந்தகரையில் வருகிற 1-ந்தேதி எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், எழுத்தாளர் ஞாநி, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர்கள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், பீட்டர்மில்டன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி