சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில் || indian tennis association replied sania
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து 318/8 (50 ஓவர்)
  • தமிழகம், புதுவையில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது
  • கருணாநிதி தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • உலக கோப்பை: வங்கதேசம் 107/1 (18 ஓவர்) தமீம் இக்பால் 55*
  • நிர்பயா ஆவணப்படத்தை முன் கூட்டியே ஒளிபரப்பியது பி.பி.சி
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
புதுடெல்லி, ஜுலை.28-

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களை தேர்வு செய்தது குறித்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் மீது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வருத்தம் மற்றும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் பாரத் ஒசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்கள் இரட்டையரில் பூபதியும், போபண்ணாவும் பயசுடன் இணைய மறுத்ததால் ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விஷ்ணுவர்தனை பயசின் ஜோடியாக, தேர்வு கமிட்டி தேர்வு செய்தனர்.

ஒலிம்பிக்குக்கு நேரடியாக தகுதி பெற சானியாவுக்கும், சோம்தேவுக்கும் வைல்டு கார்டு கேட்டு விண்ணப்பிக்கவும் தேர்வு கமிட்டி முடிவு செய்தது. வைல்டு கார்டு இல்லாமல் சானியாவினால் கலப்பு இரட்டையருக்கு தகுதி பெற முடியாது.

இதனை தொடர்ந்து, ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் 7-வது இடமும், இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தை பெற்றவருமான லியாண்டர் பயசையும், பெண்கள் இரட்டையர் தரவரிசையில் 12-வது இடமும் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக விளங்கும் சானியா மிர்சாவைவும் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவுக்கு தேர்வு செய்தோம். இருவரது தரவரிசை சேர்க்கும் போது அதன் எண்ணிக்கை 19 ஆக வரும். இதன் மூலம் கலப்பு இரட்டையரில் பங்கேற்கும் டாப்-12 ஜோடிகளில் 9-வது இடத்தை பிடித்து தகுதி பெற முடிந்தது.

மேலும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வைல்டு கார்டு அனுமதி பெற்றுள்ள சானியா மிர்சாவுடன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் ஜோடி சேர ருஷ்மி சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் ருஷ்மி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்வு முழுக்க முழுக்க தகுதி அடிப்படையிலேயே நடந்தது.

நாங்கள் அனைத்து வீரர், வீராங்கனைகளையும் மதிக்கிறோம். சானியா மிர்சா தனித்திறமை வாய்ந்த அற்புதமான வீராங்கனை என்பதை அறிவோம். சானியாவும், பயசும் இணைந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்புகிறோம்.

வீரர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் கைகோர்த்து, நாட்டிற்கு வெற்றிகளை தேடித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

அடுத்த உலக கோப்பையில் 25 அணி விளையாட வேண்டும்: தெண்டுல்கர் வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை சிகரமும், 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி தூதருமான சச்சின் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif