Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
மதுரை ஆதீன மடம் முற்றுகை: தேவர் பேரவை அமைப்பினர் 100 பேர் கைது
மதுரை, ஜூன். 27-

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்கு பஞ்சமில்லை. இளைய ஆதீன நியமனத்திற்குப் பிறகு மதுரை ஆதின மடத்தில் வருமான வரி சோதனையும் நடத்தப்பட்டது.

இன்று மதுரை ஆதின மடத்தை முற்றுகையிட்டு தேவர் பேரவை அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்த அமைப்பின் தலைவர் கணேசன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

அப்போது மதுரை ஆதீன மடத்தை மீட்டு, அரசே நடத்த வேண்டும் என்றும் மதுரை ஆதீனமாக இருக்கும் அருணகிரி நாதரையும், இளைய ஆதீனமாக இருக்கும் நித்யானந்தாவையும் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

100 பேர் ஊர்வலமாக வந்து ஆதீன மடத்தை முற்றுகையிட்டதை அடுத்து அவர்களை மதுரை போலீசார் கைது செய்தனர்.

O
P
E
N

close

அண்மை - மதுரை