சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது: ராமஜெயம் கொலையுண்ட இடத்தில் ஐ.ஜி. இன்று ஆய்வு || cpcid enquiry start ramajayam murder ig research
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது: ராமஜெயம் கொலையுண்ட இடத்தில் ஐ.ஜி. இன்று ஆய்வு
சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது: ராமஜெயம் கொலையுண்ட இடத்தில் ஐ.ஜி. இன்று ஆய்வு
திருச்சி ஜூன். 27-

முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி கொடூரமான முறையில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 7 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் 80 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். ராமஜெயம் தனிப்பட்ட விரோதத்தில் கொல்லப்பட்டாரா, அரசியல், தொழில் போட்டி, பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா என்று சுமார் 600 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.

இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை கடந்த 21-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. ராமானுஜம் பிறப்பித்தார். உடனடியாக திருச்சி சி.பி. சி.ஐ.டி. டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

இன்று காலை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாத், டி.ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரி ஆகியோர் திருச்சி வந்தனர். அவர்கள் மன்னார்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று டி.எஸ்.பி. மலைச்சாமி மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். ராமஜெயம் பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர்., தனிப்படை போலீசார் ஒப்படைத்த பொருட்கள், விசாரணை பைல்களை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் ராமஜெயம் கொலையுண்ட கிடந்த திருச்சி கல்லணை ரோடு திருவளர்சோலைக்கு ஐ.ஜி. மஞ்சுநாத், டி.ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். இதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவுடன் ராமஜெயம் கொலை வழக்கு பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் உள்ள சந்தேககங்கள், மர்மங்கள், போலீசாரின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தனர். ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆய்வுக்கு பின்னர் சி.பி.சி. ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி விட்டது. ராமஜெயம் உடல் கிடந்த இடத்தை இன்று பார்வையிட்டோம். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசாரிடமும் தேவையான தகவல்களை சேகரிக்க உள்ளோம். ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அனைவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தலீபான்களால் கடத்தப்பட்ட பாதிரியாரை விடுவிக்க பணம் தரப்பட்டதா?: காங். எழுப்பும் புதிய சர்ச்சை

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் தலீபான்களால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif