கழிவுநீர் தகராறில் ரெயில்வே ஊழியர், மனைவி, மகனுக்கு கத்திக்குத்து: பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 பேர் கைது || trainage water clash railway worker wife son knief attack arrest
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
கழிவுநீர் தகராறில் ரெயில்வே ஊழியர், மனைவி, மகனுக்கு கத்திக்குத்து: பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 பேர் கைது
கழிவுநீர் தகராறில் ரெயில்வே ஊழியர், மனைவி, மகனுக்கு கத்திக்குத்து: பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 பேர் கைது
ஆவடி, ஜூன். 27-

ஆவடி சேக்காடு தணிகை நகர் வள்ளலார் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அம்பிகாபதி (52). ஐசிஎப் ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் மோகன்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நவநீத பாண்டியன் (52). இவரது மனைவி தரணி (42). இவர்களது மகன்கள் மோகன்குமார் (24), பூர்ண சந்திரன் (22), அருண்குமார் (20). அம்பிகாபதிக்கும் நவநீத பாண்டியனுக்கும் நீண்ட நாட்களாக கழிவுநீர் தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அம்பிகாபதி வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் நவநீத பாண்டியன் வீட்டு முன்பு தேங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அம்பிகாபதியை தட்டிக் கேட்டார். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது நவநீத பாண்டியன் அவரது மனைவி தரணி, மகன்கள் மோகன் குமார், பூர்ணசந்திரன், அருண்குமார் ஆகியோர் கத்தியுடன் பாய்ந்து வந்து அம்பிகாபதி, ஜெயலட்சுமி, மோகன் ஆகியோரை குத்தினார்கள். இதில் காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீத பாண்டியன் உள்பட 5 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

செவ்வாய்பேட்டை அருகே 2 வீடுகளில் நகை– பணம் கொள்ளை

செவ்வாய்பேட்டை, செப். 5–செவ்வாய்பேட்டையை அடுத்த வேப்பம்பட்டு பாபு நகரில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி ....»