டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்திரியுடன் தொடர்பா?: மும்பையில் பரபரப்பு || Abu Jindal linked with Fausia Khan
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க பிப்.21-ல் அனைத்துக்கட்சி கூட்டம்
டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்திரியுடன் தொடர்பா?: மும்பையில் பரபரப்பு
டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்திரியுடன் தொடர்பா?: மும்பையில் பரபரப்பு
மும்பை, ஜுன்.27-
 
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். நாட்டை உலுக்கிய இத்தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதி தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டு இருக்கிறான். 30 வயதான அபு ஜிண்டால் என்ற அந்த பயங்கரவாதி, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவன். பாகிஸ்தானில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியா சென்ற ஜிண்டால், சர்வதேச போலீஸ் உதவியுடன் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டான். 
 
இந்நிலையில், இந்தியன் முஜாகுதீன் இயக்கத்தைச் சேர்ந்த அபு ஜிண்டாலுக்கும், மராட்டிய மாநில பெண் மந்திரி பவுசியா கான் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக எழுந்த புகார் மும்பையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வித்துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்துவரும் பவுசியாவும், அபு ஜிண்டால் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்தான். கடந்த 2009-ம் ஆண்டில் பவுசியா மராட்டிய மேல் சபை உறுப்பினராக இருந்தார். அப்போது மராட்டிய தலைமைச்செயலகம் அருகே உள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள பவுசியாவின் அறையில் ஒரு நாள் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
 
ஆனால், இந்த புகாரை பெண் மந்திரி பவுசியா கான் மறுத்து இருக்கிறார். "எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள எனது அறையில் பலர் தங்கி இருந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொள்வது என்பது இயலாத காரியம். இந்த விவகாரத்தில் எனது பெயரை ஏன் இழுக்கிறார்கள் என்று புரியவில்லை. ஜிண்டாலை எனக்கு தெரியாது'' என்று, அவர் கூறினார். அதே நேரத்தில், இந்த பிரச்சினையில் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று அவர் உறுதி அளித்து இருக்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு கத்தார்-பாகிஸ்தான் 16 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

கத்தார் நாடு, பாகிஸ்தானுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif