ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கழுத்து நெரித்து பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு || aathur railway station sturangle girl killed shot body railway track
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கழுத்து நெரித்து பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு
ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கழுத்து நெரித்து பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு
ஆத்தூர், ஜூன் 26- 
 
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல் நாரியப்பனூரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி அந்தோணி அம்மாள் (வயது35). இவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளியில் குடியிருந்து வந்தனர்.
 
நேற்று இரவு ஆத்தூரில் இருந்து ரெயில் மூலம் மேல்நாரியப்பனூருக்கு செல்ல இருந்தனர். இதனால் வீட்டில் இருந்து சிறிய அரிசி மூட்டையை தூக்கி கொண்டு அந்தோணி அம்மாள் ரெயில் நிலையம் சென்றார்.
 
பின்னர் 2-வதாக அரிசி மூட்டையினை எடுக்க அந்தோணி அம்மாள் வீட்டிற்கு வரவில்லை. இதனை அடுத்து அந்தோணி அம்மாள் நடந்து சென்ற தண்டவாள பகுதியில் ஆரோக்கிய சாமி தேடி பார்த்தார். இருப்பினும் அந்தோணி அம்மாளை கண்டு பிடிக்க முடியவில்லை.  
 
இதற்கிடையே இன்று காலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்தோணி அம்மாள் பிணமாக கிடந்ததை அப்பகுதினை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் அங்கு வந்தார்.
 
அவர் தண்டவாளத்தில் உடல் இரண்டு துண்டான நிலையில் கிடந்த அந்தோணி அம்மாள் உடலை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் அந்தோணி அம்மாள் கழுத்தில் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன. அவர் அணிந்து இருந்த நகையும் காணவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதிய போலீசார் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இந்த நிலையில் தண்டவாளத்தின் சிறிது தூரம் அந்தோணி அம்மாளின் செருப்பு, அவரது உடைகள் கிடந்தது. அதன் அருகே மது பாட்டில்கள் உடைந்து கிடந்தது. இதனால் இரவு நேரத்தில் தண்டவாளம் வழியாக வந்த அந்தோணி அம்மாளை மது போதையில் இருந்தவர்கள்தான் கொலை செய்து இருக்ககூடும் என போலீசார் கருதுகின்றனர்.
 
மேலும் அந்தோணி அம்மாள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரிய வரும். அந்தோணி அம்மாளை கொலை செய்தவர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டது போல் காண்பிக்க தண்டவாளத்தில் பிணத்தை வீசி சென்று உள்ளனர்.
 
அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் அந்தோணி அம்மாள் உடலில் ஏறியதால் அவரது உடல் இரண்டு துண்டானது. ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே நடந்த இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர் அச்சம் அடைந்து உள்ளனர். இது பற்றி ரெயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் இருந்து நேற்று இரவு மதுகுடித்தவர்கள் பற்றி விசாரித்து வருகிறார்கள். மேலும் ஆத்தூர் போலீசார் இந்த கொலை சம்பவம் பற்றி வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

நீர்வரத்து அதிகரிப்பு: பாசனத்துக்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல், அக்.4–முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் ....»

VanniarMatrimony_300x100px_2.gif