காரைக்குடி அருகே ஆயுதங்களுடன் ஊராட்சி மன்ற தலைவரை காரில் கடத்திய கும்பல்: போலீசார் விசாரணை || Karaikudi weapons panchayat president kidnapping
Logo
சென்னை 25-12-2014 (வியாழக்கிழமை)
  • வாரணாசி சென்ற பிரதமர் மோடி மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
  • விலை போகாததால் சாமந்தி பூக்களை ரோட்டில் கொட்டும் விவசாயிகள்
  • ரெயில்வேயை தனியார்மயமாக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை- மோடி
காரைக்குடி அருகே ஆயுதங்களுடன் ஊராட்சி மன்ற தலைவரை காரில் கடத்திய கும்பல்: போலீசார் விசாரணை
காரைக்குடி அருகே ஆயுதங்களுடன் ஊராட்சி மன்ற தலைவரை காரில் கடத்திய கும்பல்: போலீசார் விசாரணை
காரைக்குடி, ஜூன் 25-
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு ஊராட்சிமன்ற தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி என்பவர் உள்ளார். இவரது வீடு சங்கராபுரத்தில் கற்பக விநாயகர் வீதியில் உள்ளது.
 
நேற்று மாலை வீட்டில் மாங்குடி, அவரது மனைவி தேவி, தாயார், மகன், மகள்கள் இருந்தனர். மாலை 5 மணி அளவில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்தது.
 
அப்போது அந்த கும்பல் மாங்குடியை இழுத்து செல்ல முயன்றது. தடுக்க முயன்ற மாங்குடியின் குடும்பத்தினரை கீழே தள்ளி விட்டு அனைவரையும் அரிவாளை காட்டி மிரட்டியது.  
 
பின்னர் அந்த கும்பல் மாங்குடியின் கழுத்தில் அரிவாளை வைத்து அவரை இழுத்து சென்று வெளியே நின்றிருந்த காரில் அவரை கடத்தி சென்றது.
 
இதுகுறித்து காரைக்குடி டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டி புதுப்பட்டியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ஒருவர் தலைமையில் வந்தவர்கள் மாங்குடியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மாங்குடியின் உறவினர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக இந்த கடத்தல் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சிவகங்கை

section1

திருப்பத்தூர் அருகே ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் காரில் கடத்தல்

திருப்பத்தூர், டிச. 25–சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அதிகரம் என்ற ஊரை சேர்ந்தவர் வேலு. இவரது ....»