கிணற்றில் விழுந்த மேற்குவங்க இளைஞர்: மீட்பு பணிகள் தீவிரம் || Youth falls into well rescue operation on
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
கிணற்றில் விழுந்த மேற்குவங்க இளைஞர்: மீட்பு பணிகள் தீவிரம்
கிணற்றில் விழுந்த மேற்குவங்க இளைஞர்: மீட்பு பணிகள் தீவிரம்
ஹௌரா,ஜூன்.24-
 
 
மேற்குவங்க மாநிலம் ஹௌரா மாவட்டத்தின் லிலுவா பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை, மீட்க மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொத்தனார் வேலை பார்த்துவரும் ரவுசன் அலி (20) என்னும் அந்த இளைஞர், கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
 
பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் கிணற்றில் விழுந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஜாவித் கான் தெரிவித்துள்ளார். மேலும், 'கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கப்பட்டு வருகிறது. நச்சு வாயுக்களை கிணற்றிலிருந்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. ரவுசனை மீட்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன’ எனவும் ஜாவித் கூறியுள்ளார்.
 
கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அரியானா மாநிலத்தின் ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 4 வயது குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்த, அடுத்த சில மணி நேரங்களிலேயே இச்சம்பவமும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பீகாரில் மீண்டும் மூளையழற்சி நோய் தாக்கம்: 5 குழந்தைகள் பரிதாப பலி

பீகார் மாநிலத்தில் மீண்டும் மூளையழற்சி நோய் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதன் விளைவாக 5 குழந்தைகள் இறந்துள்ளனர் ....»