ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி ஆதரவு: மத்திய மந்திரி நாராயணசாமி வரவேற்பு || president election pranab mukherjee ragasamy support narayanasamy
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி ஆதரவு: மத்திய மந்திரி நாராயணசாமி வரவேற்பு
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி ஆதரவு: மத்திய மந்திரி நாராயணசாமி வரவேற்பு
புதுச்சேரி, ஜூன்.24-

பிரணாப் முகர்ஜிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளதை மத்தியமந்திரி நாராயணசாமி வரவேற்று உள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதவாது:-

பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா, சிவசேனா, கம்யூனிஸ்டு, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கேட்டார்.

இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தியும் வேண்டுகோள் விடுத்தார். பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டார்.

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதை வரவேற்கிறோம். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. எனவே சங்மா போட்டியில் இருந்து விலகி கொள்வது சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடலூரில் இன்று மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவைக்கு வருகிற 29-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் முதல் முறையாக வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். புதுவை மாநில வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif