இஸ்லாமாபாத், ஜூன் 24-
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த யூசுப்ரசா கிலானி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு காரணமாக பதவி இழந்தார். அதை தொடர்ந்து புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றார்.
முன்னாள் பிரதமர் கிலானி முல்தான் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் பதவி விலகியதால் அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. எனவே, அந்த தொகுதிக்கு உடனடியாக இடைததேர்தல் நடத்தப்படுகிறது.
அதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
அதன்படி, முல்தான் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 19-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. வருகிற 25 (நாளை) மற்றும் 26-ந்தேதியும் (நாளை மறுதினம்) வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. 28 மற்றும் 29-ந்தேதிகளில் மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்கள் வாபஸ் வருகிற ஜூலை 5-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக கிலானியின் மகன் அப்துல் கதிர் கிலானி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.