ஓட்டல் தொழிலை பாதிக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வணிகர் பேரமைப்பு வேண்டுகோள் || hotel industries affect Food Protection law band merchant letter to government
Logo
சென்னை 28-08-2015 (வெள்ளிக்கிழமை)
ஓட்டல் தொழிலை பாதிக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வணிகர் பேரமைப்பு வேண்டுகோள்
ஓட்டல் தொழிலை பாதிக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வணிகர் பேரமைப்பு வேண்டுகோள்
சென்னை, ஜூன்.24-
 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில- மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் மோகன் வரவேற்றார்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
* திண்டுக்கல்லில் நடைபெற்ற மே-5, 29-வது வணிகர் தின மாநில மாநாட்டில் பங்கேற்ற வணிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
 
* மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் ஓட்டல் தொழில் நடத்துபவர்களை பெரிதும் பாதிக்கும் என்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.
 
* இந்த சட்டத்தை தமிழ்நாட்டிலும் நிறுத்தி வைக்க, முதல்-அமைச்சருக்கு பேரமைப்பு கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
 
* சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்டம் தோறும் கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்துவது.
 
* உணவுத் தொழில் செய்பவர்கள் பதிவு மற்றும் லைசென்சு பெறும் காலக்கெடுவை 4.8.12 என்பதை காலவரையின்றி தள்ளி வைக்க வேண்டும்.
 
* உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி, கடையடைப்பு போன்ற போராட்டங்களை மாநில தலைமை நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
கூட்டத்தில் நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், சதக்கத்துல்லா, நீலகிரி தலைவர் பரமேஸ்வரன், சூலூர் சந்திரசேகரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், வி.பி.மணி, கொரட்டூர் ராமச்சந்திரன், பழம்பொருள் அணி ஜெயக்குமார், அம்பத்தூர் முகமது மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

இலங்கை போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்க துரோகம் மன்னிக்க முடியாதது: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை ....»

amarprash.gif