விமானம் மீது பறவை மோதியதால் கோளாறு: 66 பயணிகள் உயிர் தப்பினர் || bird clash on plane 66 passengers escape
Logo
சென்னை 15-09-2014 (திங்கட்கிழமை)
  • ஈரோடு: பவானி அடுத்த தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் தீ விபத்து
  • சென்னை: கலைஞர் அரங்கில் திமுக சார்பில் இன்று மாலை மூப்பெரும் விழா
விமானம் மீது பறவை மோதியதால் கோளாறு: 66 பயணிகள் உயிர் தப்பினர்
விமானம் மீது பறவை மோதியதால் கோளாறு: 66 பயணிகள் உயிர் தப்பினர்
ஆலந்தூர், ஜூன் 24-
 
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை 10.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 66 பயணிகள் பயணம் செய்தனர்.
 
நடுவானில் விமானம் பறந்து சென்றபோது பறவை ஒன்று விமானத்தில் மோதியது. மோதிய வேகத்தில் பறவை விமான எந்திரத்துக்குள் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
 
உடனே விமானி மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவசரமாக தரையிறங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதையடுத்து விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தீயணைப்பு வண்டி, மருத்துவ குழு, உள்பட அனைத்தும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. காலை 11.45 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 66 பயணிகளும் மீட்கப்பட்டனர்.
 
அவர்கள் அனைவரும் ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் மதுரை செல்ல மாற்று விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

சென்னை பேசின் பிரிட்ஜ்-அரக்கோணம் ரெயில் பாதையில் விபத்து தடுப்பு கருவி

சிக்னல்களை கவனிக்காமல் ரெயில்களை இயக்கும்போது, விபத்துகள் நேரிடுகின்றன. இத்தகைய விபத்துகளை தடுப்பதற்காக, மேலை நாடுகளில் ‘ரெயில் ....»