ஆவடியில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தற்கொலை || avadi central reserve froce police man suicide
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
  • மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
  • தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் விடுவிக்க பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
  • உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா தோல்வி
ஆவடியில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தற்கொலை
ஆவடியில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தற்கொலை
ஆவடி, ஜூன். 24-
 
ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சதானந்த கனி (வயது 45). இவர் அங்குள்ள மத்திய போலீஸ் படை குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் அவரது வீட்டில் இன்று காலை 10 மணி அளவில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் சதானந்தகனி கேரளாவை சேர்ந்தவர். திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
 
போலீஸ்காரர் சதானந்த கனி தற்கொலை செய்யும் முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் காஞ்சிபுரத்தை அடுத்த கொடுமாவிலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். எனவே அந்த பெண்ணை தனது உடலுடன் சேர்த்து புதைக்குமாறும் கூறி உள்ளார்.
 
அவரது சாவு குறித்தும் அவர் எழுதிய கடிதம் குறித்தும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரர் சதானந்த கனி எழுதிய கடிதம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

மனைவி விவாகரத்து கேட்டதால் லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை

செங்குன்றம், டிச. 20–செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி. ....»