மேடவாக்கத்தில் 1200 பெண்களுக்கு ரூ.1 கோடி மகப்பேறு நிதி உதவி: அமைச்சர் சின்னையா வழங்கினார் || medavakkam 1200 ladies get one crore pregnacy help payment
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
மேடவாக்கத்தில் 1200 பெண்களுக்கு ரூ.1 கோடி மகப்பேறு நிதி உதவி: அமைச்சர் சின்னையா வழங்கினார்
மேடவாக்கத்தில் 1200 பெண்களுக்கு ரூ.1 கோடி மகப்பேறு நிதி உதவி: அமைச்சர் சின்னையா வழங்கினார்
ஆலந்தூர், ஜூன்.24-
 
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்டவர்களில் அரசின் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 1200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா மேடவாக்கம் சுகாதார மைய வளாகத்தில் நடந்தது. அமைச்சர் சின்னையா நிதி உதவியை வழங்கினார்.
 
ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சின்னையா, தமிழக மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. மகப்பேறு உதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் என்றார்.
 
அதை தொடர்ந்து சித்தாலப்பாக்கத்தில் கலெக்டர் ஹனீஸ் சாப்ரா தலைமையில் நடந்த விழாவில் 3,096 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.
 
சோழிங்கநல்லூர் தொகுதியில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., காஞ்சிபன்னீர்செல்வம், என்.சி.கிருஷ்ணன், பெரும் பாக்கம் ராஜேசேகர், திருநீலகண்டன், கவன்சிலர் ஜானகிராமன், கண்ணன், திருவேங்கடம், மணிமாறன், டாக்டர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

ஆதனூரில் மாயமான போக்குவரத்து ஊழியர் முட்புதரில் பிணமாக கிடந்தார்- கொலையா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி, பிப். 7–கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர்–மாடம்பாக்கம் சாலையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). தாம்பரத்தில் உள்ள ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif