லண்டனில் அடுத்த வாரம் ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் அசாம் பள்ளி மாணவி || london next week olympic light assam scholl student
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
லண்டனில் அடுத்த வாரம் ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் அசாம் பள்ளி மாணவி
லண்டனில் அடுத்த வாரம் ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் அசாம் பள்ளி மாணவி
கவுகாத்தி, ஜூன் 24-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதிவரை லண்டனில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் சுடர் ஓட்டம் கடந்த மாதம் 17-ந்தேதி கிரீஸில் தொடங்கியது.

ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் வருகிற 28-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங் ஷையரில் தொடங்குகிறது. இந்த தொடர் ஓட்டத்தில் 20 நாடுகளில் இருந்து, வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து அசாமை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்கிறார். அவரது பெயர் பிங்கி கரம் கர். இவர் அசாம் மாநிலம் திபுர்கா மாவட்டம் பார்பருகா பகுதியை சேர்ந்தவர்.

இதுகுறித்து மாணவி பிங்கி கூறும்போது, இது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. திறமை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். இந்தியா சார்பாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பிங்கியின் தந்தை பெயிண்டர் ஆவார். தாயார் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். பிங்கி இன்று லண்டன் புறப்படுகிறார். விளையாட்டில் இருந்த ஆர்வம் மற்றும் குழந்தை திருமணம், மது எதிர்ப்பு போன்றவற்றை எதிர்க்கும் அவரது சமூக சிந்தனை காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்: மோடி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டர்கள் கூடுதல் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif