ஜனாதிபதி தேர்தல்: மிசோ தேசிய முன்னணி சங்மாவுக்கு ஆதரவு || Mizo National Front support Sangma president election
Logo
சென்னை 25-04-2015 (சனிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தல்: மிசோ தேசிய முன்னணி சங்மாவுக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தல்: மிசோ தேசிய முன்னணி சங்மாவுக்கு ஆதரவு
ஐசவால், ஜூன். 24-

வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அவருக்கு மிசோரம் மாநில எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆதரவு அளித்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் தலைவரும் மிசோரம் முன்னாள் முதல்-மந்திரியுமான ஷோரம் தங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, பி.ஏ.சங்மா மலைவாழ் இனத்தை சேர்ந்த வடகிழக்கு மாநிலத்தவர். இவர் கிறிஸ்தவரும் ஆவார். மிக உயர்ந்த பதவியை அதுவரை மலைவாழ் இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர் யாரும் வகிக்கவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலில் இவரை ஆதரிப்பதாக கூறினார்.

மேலும் கட்சியின் உயர்மட்ட கமிட்டியில் இது குறித்து ஆலோசித்து இந்த வார இறுதியில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மிசோ தேசிய முன்னணிக்கு ஒரு எம்.பி.யும், 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நிலநடுக்கத்திற்கு உ.பி.யில் 6 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சிலர் ....»

amarprakash160-600.gif