ஐரோப்பிய கால்பந்து போட்டி: கிரீசை சாய்த்து அரை இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி || European football match Germany advanced semi finals
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
ஐரோப்பிய கால்பந்து போட்டி: கிரீசை சாய்த்து அரை இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி
ஐரோப்பிய கால்பந்து போட்டி: கிரீசை சாய்த்து அரை இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி
கிடான்ஸ்க், ஜூன்.24-

14வது ஐரோப்பிய கால்பந்து (யூரோ) போட்டி போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடந்து வருகிறது. போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த முதலாவது கால் இறுதியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை தோற்கடித்து அரை இறுதிக்குள் முதல் அணியாக அடியெடுத்து வைத்தது.

இந்த நிலையில் போலந்து நாட்டில் உள்ள கிடான்ஸ்க் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த இரண்டாவது கால் இறுதியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி, முன்னாள் சாம்பியன் கிரீஸ் அணியை எதிர்கொண்டது.

ஜெர்மனி அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று பி பிரிவில் முதலிடம் பிடித்து இருந்தது. கிரீஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்குள் நுழைந்து இருந்தது. எதிர்பார்த்தது போல் ஜெர்மனி அணியின் ஆதிக்கமே ஆட்டத்தில் மேலோங்கி இருந்தது.

ஜெர்மனி அணியினரிடம் இருந்து பந்தை பறிப்பதற்கே கிரீஸ் அணியினர் படாதபாடு பட வேண்டியது இருந்தது. பந்து எப்போதும் தங்கள் கோல் கம்பம் பக்கமே சுற்றிக் கொண்டிருந்ததால் கிரீஸ் வீரர்கள் தடுப்பாட்டத்தில் தான் அதிகமாக கவனம் செலுத்தினர். 39-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி முதல் கோல் அடித்தது. மெசுத் ஒசில் கடத்தி கொடுத்த பந்தை கேப்டன் பிலிப் லாம் 25-வது மீட்டர் தூரத்தில் இருந்து கோலுக்குள் திணித்தார்.

முதல் பாதியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 56-வது நிமிடத்தில் கிரீஸ் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் சாம்ராஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதனைதொடர்ந்து ஜெர்மனி அணியினர் கோல் அடிக்கும் வேகத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். இதன் பலனாக ஜெர்மனி அணி வீரர்கள் சமி கேதிரா 61-வது நிமிடத்திலும், மிரோஸ்லாவ் குளோஸ் 68-வது நிமிடத்தில் தலையால் முட்டியும், மார்கோ ராஸ் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் ஜெர்மனி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னணி பெற்றது.

குளோஸ் சர்வதேச போட்டியில் அடித்த 64-வது கோல் இதுவாகும். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் கிரீஸ் வீரர் வாசிலிஸ் அடித்த பந்தை ஜெர்மனி வீரர் போடெங் கையால் தடுத்து விட்டார். இதனால் கிரீஸ் அணிக்கு 89-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சல்பிங்கிடிஸ் கோல் அடித்தார்.

முடிவில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கிரீசை தோற்கடித்து 8-வது முறையாக அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கிரீஸ் அணி கோல் கீப்பர் சிபாகிஸ், ஜெர்மனி அணியின் பல கோல் அடிக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார். இல்லையெனில் ஜெர்மனி மேலும் சில கோல்கள் அடித்து இருக்கும்.

சர்வதேச போட்டியில் (நட்புறவு போட்டியை தவிர்த்து) ஜெர்மனி அணி தொடர்ந்து பெற்ற 15-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் தொடர்ந்து 14 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெர்மனி அணி முறியடித்துள்ளது.

ஜெர்மனி அணியில் 3 கோல்கள் அடித்த மரியோ கோம்சுக்கு தொடக்கத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராகத் தான் அவர் இறங்கினார். இதே போல் போடோல்ஸ்கி அதிரடியாக நீக்கப்பட்டார். இவர்களுக்கு பதிலாக மார்கோ ராஸ், குளோஸ் ஆகியோரை பயிற்சியாளர் ஜோக்கிம் லோ தைரியமாக களம் இறக்கினார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்தது. மார்கோ ராஸ், குளோஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலந்து தலைநகர் வார்சாவில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் அரை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி, இங்கிலாந்து-இத்தாலி அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் டிரா

2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) திருவிழாவில், நேற்றிரவு படோர்டாவில் நடந்த 46-வது லீக் ....»