துவாக்குடி அருகே பரிதாபம் புதுப்பெண் தீயில் கருகி சாவு || Awful putuppen tuvakkuti arrested near death
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
துவாக்குடி அருகே பரிதாபம் புதுப்பெண் தீயில் கருகி சாவு
துவாக்குடி அருகே பரிதாபம் புதுப்பெண் தீயில் கருகி சாவு

திருவெறும்பூர், ஜூன். 23-


திருச்சி மாவட்டம் துவாக்குடி அக்பர் சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது 24) பிட்டர் வேலை செய்துவருகிறார்.இவரது மனைவி தேவி (வயது 18). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமே ஆகிறது.

இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பால் இருவரும் துவாக்குடியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

சம்பவத்தன்று இரவு கணவருக்கு தேவி சமையல் செய்தார். அப்போது திடீர் என மண்எண்ணை ஸ்டவ் வெடித்தது. இதில் தேவி உடல் கருகினார்.

அவரை காப்பாற்ற முயன்ற போது கணவர் சரவணனும் உடல் கருகினார். இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்ததில் சரவணன் குணமடைந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவி சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதுகுறித்து துவாக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். திருமண மாகி 4 மாதமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

சஸ்பெண்டு செய்யப்பட்டதால் நீதிபதி, மனைவியுடன் தற்கொலை முயற்சி: திருச்சி ஓட்டலில் விஷம் குடித்தனர்

சென்னை, பிப். 14–தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள செசன்ஸ் கோர்ட்டுகளில் பணிபுரியும் நீதிபதிகள் மீதான புகார்கள் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif