புலித்தோல் யானை தந்தங்கள் மடத்தில் இல்லை: நித்தியானந்தா ரஞ்சிதா மீது பொய் வழக்கு பதிவு மதுரை ஆதீனம் பேட்டி || madurai aadheenam interview tiger skinning elephant did nithyanantha ranjitha
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
புலித்தோல்-யானை தந்தங்கள் மடத்தில் இல்லை: நித்தியானந்தா-ரஞ்சிதா மீது பொய் வழக்கு பதிவு- மதுரை ஆதீனம் பேட்டி
புலித்தோல்-யானை தந்தங்கள் மடத்தில் இல்லை: நித்தியானந்தா-ரஞ்சிதா மீது பொய் வழக்கு பதிவு-
மதுரை ஆதீனம் பேட்டி
மதுரை, ஜூன். 23-

நித்தியானந்தா-ரஞ்சிதா மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என்று மதுரை ஆதீனம் கூறினார். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மதுரை ஆதீன மடத்தின் மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் வேண்டுகோளுக்கு இணங்க மடத்தில் நடந்த பூஜைக்கு சென்றேன். அப்போது புனித நீர் என்று கூறி ஒரு திரவம் வழங்கப்பட்டது. அதைகுடித்த சிறிது நேரத்தில் லேசான மயக்கம் ஏற்பட்டு மேலே பறப்பது போல உணர்வு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் பெண் சீடர்களுடன் அறுவறுக்கத் தக்க முறையில் நடனம் ஆடினர். சட்ட விரோத செயல்கள் நடந்தது. நித்தியானந்தா அருகே புலித்தோல் விரிக்கப்பட்டு அதில் யானை தந்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விளக்குத் தூண் போலீசில் புகார் செய்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் வக்கீல் அன்பரசன் ஆஜராகி விளக்குத்தூண் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்று கூறினார். மேலும் சோலை கண்ணன் தபால் முறையில் விளக்குத்தூண் போலீசுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, பெண் சீடர் வைஷ்ணவி ஆகியோர் மீது 1972 வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மூத்த ஆதீனம் அருணகிரி நாதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆதீன மடத்தை வழிநடத்தி செல்லக்கூடிய வல்லமையை கண்டு அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் ஆதீன மடத்தின் பாரம்பரியத்தை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார்கள். ஆதீன மடத்தில் புலித் தோல்-யானை தந்தங்கள் மரகத லிங்கம் இருப்பது போன்று கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டக் காரர்கள் கூறுவது போல மடத்தில் புலித்தோல்-யானை தந்தங்கள் எதுவும் கிடையாது. எந்த நேரத்திலும் போலீசார்-வனத்துறையினர் மடத்துக்கு வந்து சோதனை நடத்தலாம். புலித்தோல்-யானை தந்தங்களை பதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை.

நித்தியானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதால், சிலர் வேண்டுமென்று மடத்தின் மீது பொய் குற்றச் சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

நித்தி யானந்தா நியமிக்கப்பட்டது மிகவும் சரியானது என்று அவர்கள் விரைவில் உணருவார்கள். எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். நித்தியானந்தா தான் எனது அடுத்த வாரிசு என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif