இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்: ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம் || Hindu Christian Muslim shrines attacks religious leaders condemned
Logo
சென்னை 08-07-2015 (புதன்கிழமை)
  • பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்
  • நாமக்கல் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்: ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்
இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்: ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜூன்.23-
 
இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
 
அவர்கள் கூறியதாவது:-
 
இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.
 
இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களையும் கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர்.
 
மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அரசினர் அடக்கு முறைகளை, உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
 
அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக் கிறது. தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை.
 
எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படு கின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும்.
 
மதத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.
 
ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முக்கிய பிரச்சினைகளில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு நிர்வாகத்தை சீர்படுத்தவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுவால் ஏற்படும் கொடுமைகள் மற்றும் குடும்பங்கள் சீரழிவது பற்றி ....»