சிறை நிரப்பும் போராட்டம்: கைதாகும் தி.மு.க. தொண்டர்கள் ஜாமீனில் வரக் கூடாது மு.க. ஸ்டாலின் பேச்சு || jail fill protest dmk member dont apply to bail stalin
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
சிறை நிரப்பும் போராட்டம்: கைதாகும் தி.மு.க. தொண்டர்கள் ஜாமீனில் வரக் கூடாது- மு.க. ஸ்டாலின் பேச்சு
சிறை நிரப்பும் போராட்டம்:  கைதாகும் தி.மு.க. தொண்டர்கள் ஜாமீனில் வரக் கூடாது- மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜூன். 23-
 
தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
 
வேண்டும் என்றே தி.மு.க. வினரை தொடர்ந்து கைது செய்து, பொய் வழக்குகளை போடுகிறார்கள். திட்டமிட்டு தி.மு.க.வினர் பழி வாங்கப்படுகிறார்கள்.
 
முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது மட்டுமல்ல சாதாரண தொண்டர்கள் மீதும் வழக்கு போடப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள். அ.தி.மு.க. போஸ்டரை கிழித்ததாகக் கூட கூறி கைது செய்யும் கொடுமை நடக்கிறது.
 
சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்கு முன்பு ஒன்றிய அளவில் எத்தனை பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற முழு விவரத்தை ஒன்றிய செயலாளர்கள் மூலம் அறியவேண்டும். அவர்கள் தரும் பட்டியல் உண்மையானதாக இருக்க வேண்டும்.
 
கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஜாமீனில் வெளியே வராதவர்களாக இருக்கவேண்டும். அப்படிப் பட்டவர்களைத்தான் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தயாராக இருப்பவர்கள் பட்டியலை மாவட்ட செயலாளர்கள் தயாரிக்க வேண்டும்.
 
மிசா காலத்தில் நான் உள்பட தி.மு.க.வினர் சந்தித்த துயரங்கள் மிகக் கொடுமையானவை. அந்த கொடுமை களையெல்லாம் துணிவுடன் சந்தித்து மிசாவை எதிர் கொண்டோம். அதுபோன்று தி.மு.க.வினர் துணிவுடன் செயல்பட வேண்டும்.
 
என்னைப் பொறுத்த வரை தி.மு.க. அறிவிக்கும் எந்த போராட்டத்துக்கும் நான் தயாராக இருக்கிறேன். தி.மு.க.வின் தொண்டர்களோடு தொண்டனாக முதல் ஆளாக சிறை செல்ல தயாராக இருக்கிறேன்.
 
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் ....»

VanniarMatrimony_300x100px_2.gif