கோவையில் இன்று காலை விபத்து: டீக்கடைக்குள் லாரி புகுந்து 3 பேர் உடல்நசுங்கி சாவு || today morning accident lorry enter tea store three peoples dead kovai
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
  • நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்
  • வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
கோவையில் இன்று காலை விபத்து: டீக்கடைக்குள் லாரி புகுந்து 3 பேர் உடல்நசுங்கி சாவு
கோவையில் இன்று காலை விபத்து: டீக்கடைக்குள் லாரி புகுந்து 3 பேர் உடல்நசுங்கி சாவு
குனியமுத்தூர், ஜூன்.23-

கோவை பீளமேடு உணவு கார்ப்பரேசன் குடோனில் இருந்து லாரி ஒன்று இன்று காலை அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சிக்கு புறப்பட்டது. லாரியை டிரைவர் லட்சுமணன் ஓட்டி வந்தார். லாரி காலை 7.50 மணியளவில் சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சியில் சென்று கொண்டிருந்தது.

குறிச்சி சிட்கோ அருகே வந்தபோது சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத வாகனம் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் லட்சுமணன் லாரியை வலதுபுறமாக திருப்பினார். அப்போது லாரி நிலைதடுமாறி அருகிலிருந்த டீக்கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதில் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த 3 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமேனி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலன் (வயது 61), நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த நாராயண்குட்டி(61), போத்தனூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (55) எனத் தெரிய வந்தது.

படுகாயமடைந்த குறிச்சியை சேர்ந்த சிவக்குமார், போத்தனூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின் 8-4-15 ....»

amarprakash160-600.gif