பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் அறிவிப்பு || Pakistan People Party announces Raja Parvez Ashraf PM candidate
Logo
சென்னை 23-07-2014 (புதன்கிழமை)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் அறிவிப்பு
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் அறிவிப்பு
இஸ்லாமாபாத், ஜூன் 22-

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய பிரதமர் வேட்பாளராக, முன்னாள் மின்சக்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டதாக, மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குர்ஷீத் ஷா அறிவித்தார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு கூடுகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக அஷ்ரப் முறைப்படி அறிவிக்கப்படுவார்.

முன்னதாக, அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க மறுத்த வழக்கில் பிரதமர் கிலானி குற்றவாளி எனவும், எனவே அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறி உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது.

அதன்பின்னர் கூடிய மக்கள் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான ஷகாபுதீன் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஊழல் வழக்கு ஒன்றில், ராவல்பிண்டி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஷகாபுதீனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து. அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஷகாபுதீன் பிரதமராக இயலாத சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்: நேபாளத்தில் திறக்கப்பட்டது

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள ....»