கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு கூடியது || dmi karunanidhi Committee
Logo
சென்னை 31-07-2015 (வெள்ளிக்கிழமை)
கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு கூடியது
கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு கூடியது
சென்னை, ஜூன்.22-

தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கூடியது. கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 10.20 மணிக்கு கூட்டத்திற்கு வந்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொது செயலாளர்கள் துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, மத்திய மந்திரிகள் பழனிமாணிக்கம், காந்தி செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி ராசா, திருச்சி சிவா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரிமுத்து உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை நடந்த செயற்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரி, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் நடந்த அரங்கிற்குள் செயற்குழு உறுப்பினர்கள் தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படவில்லை.

மாவட்ட செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மேடைக்கு சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் நடப்பதை வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாதபடி சுற்றிலும் திரைச் சீலை அமைத்து மறைத்திருந்தனர்.

செயற்குழு நடப்பதையொட்டி அறிவாலய வளாகத்தில் ஏராளமான கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது, தி.மு.க. நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது ஆகியவை பற்றி கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால், அதற்கு பிறகு இந்த போராட்டத்தை நடத்தலாமா? அல்லது முன்கூட்டியே போராட்டம் நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. காலையில் நடந்த கூட்டம் மதியம் 1.20 மணி வரை நடந்தது. பின்னர் உணவுக்காக இடைவெளி விடப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடர்ந்து தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கவலைப்படாதீர்கள்: சொர்க்கம் ஒரு தேவதையை இழந்து விடவில்லை: இணையத்தைக் கலக்கிய படம் வெறும் கப்சா

சமீபத்தில், வெள்ளை கவுண் அணிந்த வயதான தேவதை ஒருவர், சொர்க்கத்திலிருந்து தவறி விழுந்து, பூமியில் இறந்து ....»

MM-TRC-B.gif