ரூ.200 கோடி கடன் விவகாரம்: கனிமொழியிடம் 2 மணி நேரம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை || rs 200 crores load matter kanimozhi enquiry police
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
ரூ.200 கோடி கடன் விவகாரம்: கனிமொழியிடம் 2 மணி நேரம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை
ரூ.200 கோடி கடன் விவகாரம்:  கனிமொழியிடம் 2 மணி நேரம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை
புதுடெல்லி, ஜூன். 22-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கடன் பெற்றது தொடர்பு படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடனை கலைஞர் தொலைக்காட்சி ஏற்கனவே திருப்பிக் கொடுத்தது என்றாலும் சி.பி.ஐ. இது தொடர்பாக கனிமொழி எம்.பி. மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமாரை கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடைத்தது.
 
கனிமொழியும், சரத்குமாரும் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்கள். என்றாலும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் ஆஜராகி வருகிறார்கள்.
 
இந்த நிலையில் கலைஞர் டி.வி. நிறுவனம், ரூ.200 கோடி கடன் பெற்றது தொடர்பான பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கனிமொழி எம்.பி.க்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
 
கனிமொழி எம்.பி. அந்த சம்மனை ஏற்று கடந்த சனிக்கிழமை டெல்லி சென்று அமலாக்கப்பிரிவில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
 
இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது கனிமொழி எம்.பி. தன் தரப்பு விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை

மதுராந்தகம், பிப். 13–விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif