கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் தள்ள ராஜபக்சே சதி || tamilnadu fisherman mahendra rajapaksa speech
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் தள்ள ராஜபக்சே சதி
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் தள்ள ராஜபக்சே சதி
ரியோ-டி-ஜெனிரோ, ஜுன். 22-

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனிரோ நகரில் "இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு'' என்ற தலைப்பில் ஐ.நா.சபை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இயற்கை வளம் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பேசினார்கள்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் இந்த மாநாட்டில் பேசினார். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டு சிங்கள வெறியரான இவரது ஆத்திரம் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது திரும்பி இருக்கிறது.

மாநாட்டில் தன் ஆத்திரத்தை கொட்டிய அவரது திமிர் பேச்சு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ராஜபக்சேயின் அந்த பேச்சு விவரம் வருமாறு:-

இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், வேண்டும் என்றே இலங்கை கடல்பரப்புக்குள் வருகிறார்கள். சிறு மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளை பயன் படுத்தி மீன்வளம் அனைத்தையும் அள்ளி சென்று விடுகின்றனர்.

மேலும் பாக். ஜலசந்தி பகுதியில் உள்ள அரிய கடல் செல்வங்களை கொள்ளையடிக்கிறார்கள். எனவே பாக். ஜலசந்தியை பிரச்சினைக்குரிய பகுதியாக அறிவிக்க வேண்டும். இலங்கை கடல் பகுதிக்குள் வருபவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இலங்கை சட்டப்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பிறகு பேச்சு நடத்தி விடுவிக்கப்படுகிறார்கள். பாக். ஜலசந்தியில் உள்ள கடல் வளம் எங்களுக்கு உரியது. எனவே இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது சர்வதேச கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மகிந்த ராஜ பக்சே கூறினார்.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் ஏற்கனவே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில்தான் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து சிங்களர்களுக்கு ஆதரவாக உள்ளதால் தமிழக மீனவர்கள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது சர்வதேச கடல் சட்டப்படி நடவடிக்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று ராஜபக்சே கூறியதில் புதிய சதி திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடல் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தார்கள் என்று கூறி கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 20 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க சிங்களர்கள் முடிவு செய்துள்ளனர் என்பதையே ராஜபக்சேயின் திமிர் பேச்சு காட்டுகிறது.

இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை முறியடிக்கவே இந்த சதி திட்டத்தை சர்வதேச மாநாட்டில் ராஜபக்சே பேசி பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிடம் எல்லா ஒத்துழைப்பையும் பெற்று விடுதலைப்புலிகளை அழித்த இலங்கை, தற்போது இந்தியாவை அலட்சியம் செய்து வருகிறது.

சீனாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள தலைவர்கள் இனி யாரும் நம்மை தட்டி கேட்க முடியாது என்று நினைக்கிறார்கள்.` கச்சத்தீவு பகுதியில் உள்ள எண்ணை வளத்துக்கு ஏற்கனவே சீனா குறி வைத்துள்ளது. எனவே சீனா கொடுக்கும் தைரியத்தில்தான் தமிழக மீனவர்களை சீண்டிப்பார்க்க இலங்கை துணிந்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஒரே புகைப்படத்தால் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய ஜோடி

தனது காதலனே கணவனாகப் போகும் மகிழ்ச்சியைக் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த மிரண்டா லெவி ....»