லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு || Leander Paes quits London Olympic Tennis
Logo
சென்னை 28-05-2015 (வியாழக்கிழமை)
லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு
லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு
புதுடெல்லி,ஜூன்.21-
 
லண்டன் ஒலிம்பிக்கின் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணியில் ,ஆண்கள் பிரிவில் லியாண்டர் பயசுடன், மகேஷ் பூபதி இணைந்து விளையாடுவார் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
 
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பயசுடன் இணைந்து விளையாட முடியாது என மகேஷ் பூபதி கூறினார். இரட்டையர் போட்டிகளில் பல வருடங்களாக வெற்றிகரமான ஜோடியாக விளங்கிவந்த பயசும், பூபதியும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.    
 
பூபதி ஆட மறுத்ததால் மற்றொரு பிரபல இந்திய வீரரான ரோகன் போபண்ணா, பயசுடன் இணைந்து விளையாடுவார் என டென்னிஸ் சங்கம் பின்னர் அறிவித்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பயசுடன் இணைந்து விளையாட முடியாது என போபண்ணாவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த டென்னிஸ் சங்கம், விஷ்ணுவர்தன் என்ற வீரர் பயசுடன் இணைந்து விளையாடுவார் என அறிவித்தது.
 
இந்நிலையில் விஷ்ணுவர்தனுடன் இணைந்து விளையாட முடியாது என பயஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘பூபதி, போபண்ணா ஆகிய இருவர் தவிர யாருடனும் இணைந்து ஆடப் போவதில்லை. தரவரிசையில் எனக்கு நிகராக இல்லாத விஷ்ணுவுடன் இணைந்து ஆட முடியாது. விஷ்ணுவுடன் ஆடுமாறு என்னை நிர்பந்தித்தால் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக நான் தயார்’ என பயஸ் கூறியிருந்தார்.
 
இதனையடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு டென்னிஸ் அணிகள் விளையாடும் என இன்று மீண்டும் அறிவித்தது. அதன்படி, 'பயஸ்-விஷ்ணு ஒரு ஜோடியாகவும், பூபதி- போபண்ணா மற்றொரு ஜோடியாகவும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடுவார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன், பயஸ் இணைந்து ஆடுவார்' எனக் கூறப்பட்டிருந்தது.
 
டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த பயஸ், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தான் விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இத்தகவலை தெரிவித்துள்ள டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா, ஆண்கள் இரட்டையர் போட்டிகளிலிருந்து மட்டும் பயஸ் விலகுகிறாரா அல்லது சானியாவுடன் ஆட வேண்டிய கலப்பு இரட்டையர் போட்டிகளிலிருந்தும் விலகுகிறாரா என்பதை தெளிவுபடுத்தவில்லை.
 
பூபதி மற்றும் போபண்ணாவின் முடிவால் ஏற்கனவே அதிர்ச்சியடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், லியாண்டர் பயசின் இந்த திடீர் அறிவிப்பால் தற்போது மேலும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு, வேறு நல்ல முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும்  தள்ளப்பட்டுள்ளது.
 
இவ்விவகாரத்தில் அடிக்கடி முடிவை மாற்றிக்கொள்ளும் இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு, இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் மல்கோத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘வீரர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப சங்கம் வளைந்து கொடுக்கக் கூடாது. சங்கத்தால் எடுக்கப்படும் முடிவு விளையாட்டை மேம்படுத்தும் விதமாக அமைய வேண்டும் எனவும் மல்கோத்ரா கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

50 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்– நோட்டுகள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்கப்படுகிறது

சென்னை, மே. 28–தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1–ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே பாடப்புத்தகம், ....»

MM-TRC-Set2-B.gif