கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் || karur tamilnadu newspaper Paper company free medical camp
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்  சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
கரூர், ஜூன்.21-
 
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தனது சமுதாய பணியின் ஒரு பகுதியாக இலவச பொது மருத்துவ முகாமினை திருக்காடுதுறை ஊராட்சிக் குட்பட்ட ஆலமரத்துமேடு கிராமத்தில் நடத்தியது.

காகித நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒன்றாக ஆலையைச்சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம மக்களின் வசதிக்காக நடத்தப்படும் இச்சிறப்பு பொது மருத்துவ முகாம் காலை 8.30 மணி அளவில் தொடங்கியது.

இம்முகாமினை காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) மணி துணை பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் திருக்காடுதுறை ஊராட்சி தலைவர் மரகதம் மற்றும் உதவித்தலைவர் சந்திரபிரபு ஆகியோரும் தொடக்கவிழாவில் கலந்து கொண்டனர்.
கரூர் அமராவதி மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.என்.வேலுச்சாமி, தலைமையில் பல்வேறு மருத்துவத் துறையைச்சார்ந்த மருத்துவர்கள் சிவக்குமார் (பொது மருத்துவர்), சிங்காரம் (குழந்தைகள் நலம்), செந்தில் குமார் (அறுவை சிகிச்சை நிபுணர்), கண்ணன் நடேசன் (பல் மருத்துவம்), ராஜேந்திரன் (எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்), அருள்ஜோதி (அறுவை சிகிச்சை நிபுணர்), முருகேசன் (தோல் மருத் துவம்), ஜெயபிரதா (மகப் பேறு) ஆகிய சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு திருக்காடுதுறை ஊராட்சி பகுதி மற்றும் அக்கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த மொத்தம் 356 பேர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
 
இதில் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இருதயம், எலும்பு, தோல், குழந்தைகள் நலம், மகப்பேறு, கர்ப்பப்பை, பல், காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் அறிகுறிகளுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 80 நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்டறியப்பட்டு 30 நபர்களுக்கு இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டு ரூ.60,000/- மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்தும் காகித நிறுவனத்தின் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற முகாமிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி காகித நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறப்பு மருத்துவ முகாமினை காகித ஆலையின் மனித வளத்துறை துணைப் பொது மேலாளர் பட்டாபிராமன் தலைமையில் மனித வளத்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கரூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif