கரூர் எம்.குமாரசாமி கல்லூரி பேராசிரியருக்கு தேசிய விருது || karur kumarasamy college Professor National Award
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த பெண் பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பீகார் மாநிலம் அருகே சாசாராமில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி
கரூர் எம்.குமாரசாமி கல்லூரி பேராசிரியருக்கு தேசிய விருது
கரூர் எம்.குமாரசாமி கல்லூரி பேராசிரியருக்கு தேசிய விருது
கரூர்,ஜூன்.21-
 
கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி தமிழகத்தில் உள்ள முன்னணி என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது. இந்த கல்லூரியில் எம்.சி.ஏ. முதுகலை கம்யூட்டர் துறை உதவி பேராசிரியராக கணேஷ் பணியாற்றி வருகிறார்.
 
இவர் கல்லூரி சார்பில் ஸ்காட்ச் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம், திட்ட கமிஷன், ஊரக வளர்ச்சி துறைக்கான மத்திய அரசு நிறுவனம், தபால் துறை ஆகிய நிறுவனங்கள் மும்பையில்ஜூன் 8 மற்றும் 9-ந்தேதி வரை 13 வது சிந்தனையாளர்கள் கருத்தரங்கம் நடத்தியது.
 
இதில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் எம். குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி எம்.சி.ஏ.துறை துணை போராசிரியர் கணேஷ் சமர்ப்பித்த உயர் கல்வியை வானளாவிய எல்லைக்கு தீவிரமாக்குதல் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்திருந்தார். இந்த ஆய்வு கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த கட்டுரைக்கு தேசிய அளவில் ஹயாட்சி ஏஜென்சி மும்பை மாநாட்டில் சிறந்த உயர் கல்வியை மேம்படுத்தல் பற்றிய சிறப்பான கருத்துக்கரு இருக்கிறது என்று தேர்வு செய்யப்பட்டது.
 
மேலும் இந்த கட்டுரைக்கு ரூ. 8 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 24 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.இவர்களில் கணேஷின் கட்டுரை மட்டுமே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரை பாராட்டி கல்லூரி தலைவர் எம்.குமாரசாமி, செயலாளர் கு.ராமகிருஷ்ணன், முதல்வர் டாக்டர் வளவன், மேலான்மை நிர்வாக இயக்குனர் குப்புசாமி ஆகியோர் பாராட்டினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கரூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif