ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்ரிடி || Shahid Afridi considering ODI retirement
Logo
சென்னை 05-07-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்ரிடி
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்ரிடி
கராச்சி,ஜூன்.20-
 
2015-ல் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அறிவித்துள்ளார்.
 
தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டரான அப்ரிடி, இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் வெறும் 28 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளே எடுத்துள்ளார். இத்தொடரில் இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி 1-3 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை இழந்துள்ளது.
 
தனது மோசமான ஆட்டம் பற்றி பேசிய அப்ரிடி, ‘நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. மோசமான பார்ம் காரணமாக நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளேன். இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் ஓய்வு முடிவை வெளியிடுவேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் நான் தொடர்ந்து ஆடுவேன். இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே நான் ஓய்வுபெற உள்ளேன். அப்போதுதான் 2015-ல் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு சிறந்த பாகிஸ்தான் அணியை அனுப்ப முடியும்’ என்றார்.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த இஜாஸ்பட்டுடன் ஏற்பட்ட மோதலால், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக கடந்த வருடம் அப்ரிடி அறிவித்தார். ஆனால் இஜாஸ்பட் மாற்றப்பட்டு சகா அஷ்ரப் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டதும் தனது முடிவை மாற்றிக்கொண்ட அப்ரிடி, மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, ஜூலை 5–பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–தமிழ்நாட்டில் இருந்து ....»