பெருந்துறை அருகே பரிதாபம்: தறிப்பட்டறை அதிபர் பலி || perunthurai near tarippattarai President dead
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல்
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
பெருந்துறை அருகே பரிதாபம்: தறிப்பட்டறை அதிபர் பலி
பெருந்துறை அருகே பரிதாபம்: தறிப்பட்டறை அதிபர் பலி
பெருந்துறை, ஜூன். 20-
 
குன்னத்தூர் அருகே உள்ள ஆலம்பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 42).தறிப்பட்டறை அதிபர்.
 
இவர் தனது பட்டறையில் வேலை செய்ய தொழிலாளர்களை அழைத்து வர இன்று (புதன்கிழமை) காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். பெருந்துறை அருகே உள்ள கள்ளியம்புதூர் என்ற இடம் அருகே அவர் வந்து கொண்டு இருந்தார்.
 
அப்போது திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு துணிபேல் ஏற்றி கொண்டு ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. வேகமாக வந்த இந்த வேன் திடீர் என்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 
இதில் நிலை தடுமாறிய வேனும், மோட்டார் சைக்கிளும் தார்மாறாக ஓடி ரோட்டு ஓரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரமூர்த்தி பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
 
இது பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த ஈஸ்வரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஈஸ்வரமூர்த்திக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பால சுப்பிரமணியம் (19) என்ற மகனும், மகேஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - ஈரோடு

section1

திம்பம் மலைப்பாதையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது: போக்குவரத்து துண்டிப்பு

சத்தியமங்கலம், அக்.31–ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைபாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ....»