பவானி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது: வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர் || bavani torture monkey arrest forester capture cage
Logo
சென்னை 29-11-2014 (சனிக்கிழமை)
  • கோவில்பட்டியில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது
  • கனமழை: கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பவானி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது: வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
பவானி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது: வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
அந்தியூர், ஜூன். 20-
 
பவானி அருகே உள்ளது மோளகவுண்டன்பாளையம் புதூர். இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு வனப்பகுதியில் இருந்து ஒரு குரங்கு வந்தது.
 
அந்த குரங்கு கடந்த சில தினங்களாக அப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசங்கள் செய்து வந்தது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டு விட்டு எடுத்து வீசுவது. இரவு நேரங்களில் ஓட்டை பிளப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை குறிவைத்து துரத்துவது போன்று அந்த குரங்கு சேட்டை செய்தது.
 
குறிப்பாக சங்கர் என்பவரது தோட்டத்தில் கொய்யா, சப்போட்டா பழங்களை பறித்து சேதப்படுத்தியது.  
 
இதையடுத்து பொதுமக்கள் அந்த குரங்கை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த குரங்கு மரத்தில் ஏறி தப்பிவிடும். பின்னர் மீண்டும் வந்து அட்டகாசம் செய்தது.
 
இதைதொடர்ந்து சங்கர் அந்தியூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வனவர் தனசேகரன் அந்த குரங்கினை பிடிக்க நேற்று இரவு சங்கர் தோட்டத்தில் இரும்பு கூண்டினை கொண்டு வைத்தார்.
 
இன்று அதிகாலை குரங்கு கூண்டுக்குள் சிக்கியது. தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று அந்த குரங்கினை மீட்டு அந்தியூர் வரட்டுப்பாளையம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 60 புதிய துணை மின்நிலையங்கள்

தமிழகம் முழுவதும் மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 60 புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையில் மின்சார வாரிய ....»