20 ஓவர் உலக கோப்பை மூலம் மீண்டும் களமிறங்க யுவராஜ் ஆர்வம் || Yuvraj Singh eyes ICC World T20 to return to cricket
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
20 ஓவர் உலக கோப்பை மூலம் மீண்டும் களமிறங்க யுவராஜ் ஆர்வம்
20 ஓவர் உலக கோப்பை மூலம் மீண்டும் களமிறங்க யுவராஜ் ஆர்வம்
புதுடெல்லி,ஜூன்.20-
 
செப்டம்பர் மாதம் இலங்கையில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மூலம், கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க தான் ஆர்வமுடன் இருப்பதாக புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
 
இதுபற்றி பேசிய யுவராஜ், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தனது பெயர் இடம்பெற விரும்புவதாகவும், சிறந்த அணியான இந்தியா கோப்பையை வெல்லும் எனவும் கூறியுள்ளார். மேலும், ‘இந்திய அணியில் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நானும் அணியில் இடம்பெறுவேன் என நம்புகிறேன். பேட்டிங்கில் இந்தியா தான் வலுவான அணி. நமது பந்துவீச்சும் சிறப்பாக அமைந்துவிட்டால், கோப்பையை வெல்லலாம். இந்தியாவை தவிர ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளும் உலக அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் திறன்கொண்டவை’ எனவும் யுவராஜ் கூறினார்.
 
மேலும், ‘நான் எப்போது போட்டிகளுக்கு திரும்புவேன் என உறுதியாகக் கூற முடியாது. ஆனால் நூறு சதவீத உடல்தகுதியை எப்போது எட்டுகிறேனோ, அப்போதே களம் திரும்பி விடுவேன். இந்தியாவுக்காக நான் விளையாடுவது சவாலான விஷயம். ஏனெனில், எனது உடல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அதனை புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும்’ எனவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஜம்மு காஷ்மீரில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 16 பேர் பலி

ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ....»