கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்குள் கடல் நீர் புகுந்தது || sea anger in mamallapuram
Logo
சென்னை 25-04-2015 (சனிக்கிழமை)
  • பல்லடம் அருகே கார் - லாரி மோதல்: 6 பேர் பலி
  • மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்
  • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடத்தை தேர்வு செய்ய மத்திய குழு இன்று செங்கல்பட்டு வருகை
கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்குள் கடல் நீர் புகுந்தது
கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்குள் கடல் நீர் புகுந்தது
மாமல்லபுரம், ஜூன்.20-
 
சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் நகரம் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. நேற்று மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் கடற்கரை கோவில் அருகில் உள்ள கடற்கரையில் 10 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. அவை 80 மீட்டர் தூரத்துக்கு கரையை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன.
 
இதனால் கடல் நீர் கடற்கரை கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவிலை சுற்றி கடல் நீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் உணவு விடுதிகளிலும் கடல் நீர் உட்புகுந்தது. இதனால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
 
மேலும் கொக்கிலமேடு, தேவனேரி, வெண்புருஷம் மீனவர் பகுதியிலும் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்தது. இதுகுறித்து மீனவர் கொக்கிலமேடு பி.குணசேகரன் கூறும்போது, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை.சுனாமிக்கு பிறகு கடலின் சீற்றத்தை யாராலும் கணிக்க முடியவில்லை.
 
கடல் கொந்தளிப்பு நேரங்களில் மீன் பிடிக்க நடுக்கடலுக்கு செல்லும் நாங்கள் நீரோட்டம் கடும் வேகத்துடன் இருப்பதை அறிந்து வெறும் படகுடன் கரை திரும்ப நேரிடுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
 
தற்போது தான் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நாங்கள் கடலுக்கு சென்று வருகிறோம். ஆனால் நீரின் சுழற்சி, ராட்ச அலையின் சீற்றம் காரணமாக கடலின் தன்மையை எங்களால் கணிக்க முடியவில்லை. மீன்களும் அதிகமாக கிடைப்பதில்லை என்றார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாஸ்ட் புட் கடை ஊழியரை கொடூரமாக தாக்கிய அமைச்சரின் மகன்

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாஸ்ட் புட் கடை ஊழியரை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ....»