கடம்பூர் வனப்பகுதியில் மழை: பெரும்பள்ளம், குண்டேரிபள்ளம் அணைகள் நிரம்புகிறது || kadampur forest rain perumpallam kunderipallam dams full
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
கடம்பூர் வனப்பகுதியில் மழை: பெரும்பள்ளம், குண்டேரிபள்ளம் அணைகள் நிரம்புகிறது
கடம்பூர் வனப்பகுதியில் மழை: பெரும்பள்ளம், குண்டேரிபள்ளம் அணைகள் நிரம்புகிறது
கோபி, ஜூன்.18-


ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று மாலை 6மணி அளவில் மழை தூறியது. மேலும் வானமும் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 20 நிமிடம், 30 நிமிடம் என மழை கொட்டியது. கடம்பூர், அணில்நத்தம், குன்றி, மாக்கம்பாளையம் போன்ற பகுதிகளில் மழை கொட்டியது.

இதனால் வனப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்றிலும் தண்ணீர் புது வெள்ளமாய் பாய்ந்தது. வன ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர் வனப்பகுதியில் கொட்டிய பலத்த மழையால் மலையடிவாரத்தில் உள்ள பெரும்பள்ளம், குண்டேரிபள்ளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணைகள் நிரம்பி வருகிறது.

இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் 2 அணைகளும் நிரம்பிவிடும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif