அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள நைனா முகமது கல்லூரியில் கல்வி கட்டண சலுகைகள் தாளாளர் முகமதுபாரூக் தகவல் || arranthanki nyyna college fees concessions
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள நைனா முகமது கல்லூரியில் கல்வி கட்டண சலுகைகள் தாளாளர் முகமதுபாரூக் தகவல்
அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள நைனா முகமது கல்லூரியில் கல்வி கட்டண சலுகைகள்
தாளாளர் முகமதுபாரூக் தகவல்
புதுக்கோட்டை,  ஜூன். 18-
 
அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பது என்ற குறிக்கோளுடன் நைனாமுகமது கல்வி அறக்கட்டளையால் இந்த கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இளங்கலை பாடப்பிரிவுகளில் பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், மைக்ரோ பயாலஜி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, எம்.ஏ. ஆங்கிலம் போன்ற வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இக்கல்வி நிறுவனத்தில் அல்.அமான் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நைனா முகமது கல்வியியல் கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த கல்வியாண்டு முதல் மகளிர் கல்லூரி புதிதாக தொடங்கி இன்று முதல் நடைபெற உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று எமது கல்லூரியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் 50 சதவீத கல்விக்கட்டண சலுகை அளிக்கப்படும். இதனால் வறுமையால் வாடும் குடும்பத்தின் மாணவிகள் பயன்பெறுவர். 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று அரசு இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் செலுத்தினால் போதுமானது.
 
மாணவிகள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 50 சதவீதமும், 85-90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 25 சதவீதம் கல்விக்கட்டண சலுகையும் அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் பெற்ற நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேருவோருக்கும் இந்த கட்டணச்சலுகை அளிக்கப்படும். மேலும் பல்கலைக் கழக தேர்வில் வகுப்பில் சிறப்பிடம் பெறுவோருக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.
 
அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணம் தவிர வேறு எந்தவித மறைமுக கட்டணமோ, நன்கொடையே இக்கல்லூரியில் வசூலிப்பதில்லை. கடந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அதிக அளவில் எமது கல்லூரியின் மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுக்கோட்டை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif