ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 30 ந் தேதி சென்னை வருகிறார்: கருணாநிதி பேட்டி || pranab mukherjee visit chennai on 30th karunanidhi interview
Logo
சென்னை 29-08-2014 (வெள்ளிக்கிழமை)
  • மாலைமலர் வாசகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
  • விழுப்புரம் அருகே பாமக நிர்வாகி முருகன் வெட்டிக்கொலை
  • ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • திருவள்ளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 30-ந் தேதி சென்னை வருகிறார்: கருணாநிதி பேட்டி
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 30-ந் தேதி சென்னை வருகிறார்: கருணாநிதி பேட்டி
சென்னை, ஜூன்.18-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த
பதில்களும் வருமாறு:-
 
கேள்வி:- தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே?
 
பதில்:- எனக்குத் தெரியாது.
 
கேள்வி:- உங்கள் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 
பதில்:- பிரகாசமாக உள்ளது.
 
கேள்வி:- புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளருக்கு 'டெபாசிட்' கிடைத்திருப்பதைப் பற்றி?
 
பதில்:- அதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.
 
கேள்வி:- 'கலாம்' என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் திசை திருப்புவது பற்றி?
 
பதில்:- சில பேர், அதை திசை திருப்ப முயலுகிறார்கள். அப்துல்கலாம் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிக்கக்கூடியவன் நான்.
 
கேள்வி:- கடந்த முறை குடியரசு தலைவர் வேட்பாளராக இருந்த பிரதிபா பட்டீல் முதன் முதலாக தமிழகத்திற்குத்தான் வாக்கு கேட்க வந்தார். அது போல இந்த முறையும் பிரணாப் தமிழகத்திற்கு வருவாரா?
 
பதில்:- வரும் 30-ந் தேதி சென்னைக்கு முதன் முதலாக வாக்காளர்களைச் சந்திப்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வாக்குகளைக் கேட்பார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு, விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
 
கேள்வி:- குடியரசு தலைவர் தேர்தல் குறித்து காங்கிரசில் குழப்பம் இருப்பதாக அத்வானி சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- நோ கமெண்ட்ஸ் (கருத்து சொல்ல விரும்பவில்லை).
 
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திருப்பூர், ஆக. 29–திருப்பூர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள ....»