ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 4 பேர் பலி || Four persons die in lightning strike
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
கும்லா,ஜூன்.17-
 
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோகர்தகா மற்றும் கும்லா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள லோகர்தகா மாவட்டத்தின், நதிநகர் பகுதியில் தொழிலாளர்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென மின்னல் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கியதில்,  அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதேபோல், கும்லா மாவட்டத்தின் மகுவதோலி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். ஜார்க்கண்டில் சமீபத்தில் நிலவிய கடுமையான வெயிலால் பலர் பலியான நிலையில், மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்குள்ள மக்களை கவலையடையச் செய்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அம்பேத்கர் நினைவிடத்திற்கான பூமி பூஜையை அரசு நடத்தாவிட்டால் நாங்களே நடத்துவோம்: காங்கிரஸ் அதிரடி

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு அம்பேத்கரின் நினைவிடத்திற்கான பூமி பூஜையை தொடங்காவிட்டால், அதை நாங்கள் ....»