தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் சிக்கல் || Prezident candidate selection of NDA fails
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் சிக்கல்
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் சிக்கல்
புதுடெல்லி,ஜூன்.17-
 
ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரணாப் அறிவிக்கப்பட்டதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க முழு மனதுடன் ஆதரவு தெரிவித்தது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கலாம் தான் எங்கள் வேட்பாளர் என விடாப்பிடியாக இருந்து வருகிறது. இது தொடர்பாக சோனியாவுடன் ரகசிய ஆலோசனை நடத்திய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
அ.தி.மு.க தரப்பில் பி.ஏ.சங்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் சங்மாவை ஆதரிக்க விரும்புகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக, வேட்பாளரை நிறுத்துவதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து பா.ஜ உயர்மட்டக்குழு நேற்று கூடி விவாதித்தது.
 
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தை சிவசேனா புறக்கணித்தது. கூட்டணி தலைவர்களுக்கிடையே நிலவும் கருத்து வேற்றுமை காரணமாக, இன்றைய கூட்டத்தில் எவ்வித முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.
 
இதுபற்றி பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சரத்யாதவ், 'இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடன் அத்வானி பேச உள்ளார். இதன் அடிப்படையில் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐஸ்க்ரீம் பார்லர் முன் சிறுநீர் கழித்து அவமானப்பட்ட கிறிஸ்டினோ ரொனால்டோ

கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் ....»