கர்நாடகாவில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதல்: 8 பேர் பலி || Eight pilgrims killed in accident
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
  • பரிதாபாத் பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: 230 கடைகள் சாம்பல்
  • நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
  • மகாராஷ்டிரா முதல்வர் வேட்பாளர் ரேசில் கட்காரியும் இடம்பெற்றார்
  • மேகாலயவில் 6 உல்பா தீவிரவாதிகள் கைது
  • மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சிவசேனா குழு மும்பை திரும்பியது
கர்நாடகாவில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதல்: 8 பேர் பலி
கர்நாடகாவில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதல்: 8 பேர் பலி
பெல்காம்,ஜூன்.17-
 
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பெங்களூர்-புனே நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக சென்ற பாதசாரிகள் மீது மோதியது.  இந்த விபத்தில் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 8 யாத்ரீகர்கள் பலியாயினர்.
 
இந்த விபத்து குறித்துப் பேசிய போலீசார், 'விபத்து ஏற்படக் காரணமாயிருந்த பஸ், சிக்கொடி பகுதியிலிருந்து பெல்காம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதிக வேகத்தில் சென்ற பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் சென்றவர்கள்  மீது மோதியது. இதில் தேவசாயனி ஏகாதசியை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாண்டுரங்கர் ஆலயத்திற்கு, கர்நாடகாவிலிருந்து பாதயாத்திரையாக சென்ற யாத்ரீகர்கள் 8 பேர் பலியாயிர். பலியானவர்களில் 6 பேர் பெண்கள். விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.
 
விபத்தில் காயமடைந்த மேலும் பல யாத்ரீகர்கள் பெல்காம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கொலம்பியாவில் திடீர் நிலநடுக்கம்

கொலம்பியா, அக்.22 தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஈக்குவடார் எல்லைப்பகுதியில் நேற்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif