ஆவின் பால் பர்பி விரைவில் அறிமுகம் || aavin milk production new sweet
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ஆவின் பால் பர்பி விரைவில் அறிமுகம்
ஆவின் பால் பர்பி விரைவில் அறிமுகம்
சென்னை,ஜூன்.17-
 
ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பொது மக்கள் இடையே அமோக வரவேற்பு உள்ளது. பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்சி, பால்கோவா, மைசூர் பாகு போன்றவற்றை ஆவின் தயாரித்து வழங்குகிறது. சமீபத்தில் மேங்கோ மில்க் ஷேக்கை அறிமுகம் செய்தது.
 
ஆவின் லஸ்சி, ஐஸ்கிரீம், குல்பி, நறுமணப்பால் போன்றவை பார்லர்களில் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகின்றன. பண்டிகை காலங்களில் ஆவின் நெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். தேவையான அளவிற்கு பால் உற்பத்தி இல்லாததால் ஆவின் தயாரிப்புகள் தாராளமாக கிடைக்காமல் இருந்தது.
 
கடந்த ஆண்டில் பால் உற்பத்தியை பெருக்க அரசு எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து தற்போது பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. 2011 மே மாதம் வரை 21.9 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 25 லட்சமாக உயர்ந்துள் ளது. கடந்த வியாக்கிழமை அன்று இது 25 லட்சத்து 51 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது.
 
பால் உற்பத்தி பெருகி வருவதால் தற்போது ஆவின் பால் பாக்கெட்டுகள், பார் லர்களில் தாராளமாக கிடைக்கின்றன. நெய், வெண்ணையும் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது.
 
ஆவின் புதிய தயாரிப்பில் தற்போது இறங்கியுள்ளது. பாலினால் தயாரிக்க கூடிய பால்பேடாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
 
இந்த மாத இறுதிக்குள் பால்பேடா கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனைத்து இனிப்பு கடைகளிலும் பால்பேடா விற்கப்படுகிறது. ஆனால் ஆவின் இந்த வகையை தயாரிக்கவில்லை. இப்போது தான் பால் பேடா தயாரிப்பில் இறங்கியுள்ளது.
 
தமிழர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் பால் பேடாவை விரும்பி சாப்பிடுவதால் அதிக வரவேற்பு இருக்கும் என்று ஆவின் அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மீண்டும் தலைவராக தேர்வு: தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து

சென்னை, பிப். 10–தமிழக பாரதிய ஜனதா தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif