வெள்ளை மாளிகையில் ஒபாமாவை கேலி செய்த நிருபர் || white house obma reporter tease
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
வெள்ளை மாளிகையில் ஒபாமாவை கேலி செய்த நிருபர்
வெள்ளை மாளிகையில் ஒபாமாவை கேலி செய்த நிருபர்
வாஷிங்டன், ஜூன். 17-
 
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா நேற்று பேட்டி அளித்தார். அதில், ஏராளமான நிருபர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது வாஷிங்டனில் இருந்து ஒளிபரப்பாகும் இணைய தள செய்தி நிறுவனத்தின் நிருபர் நெய்ல் முன்ரோ கலந்து கொண்டார். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
 
ஒரு கட்டத்தில் ஒபாமா பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இடை மறித்து, அமெரிக்கர்களை விட வெளிநாட்டினர் மீது ஏன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள் என பலத்த சத்தமாக கேட்டார்.
 
அதற்கு, தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் கேள்வி கேட்கும் நேரம் இதுவல்ல என அடக்கத்துடன் ஒபாமா பதில் அளித்தார். உடனே நிருபர் முன்ரோ குறுக்கீட்டு, அப்படியானால் நீங்கள் கேள்வி கேளுங்கள் என கேலியுடன் கிண்டலாக கூறினார்.
 
அதற்கும் ஒபாமா, இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதனால் உங்களிடம் கேள்வி கேட்க முடியாது என நிதானமாக பதில் அளித்தார். இருந்தாலும் முன்ரோ விடவில்லை. நாகரீகமின்றி அதிபர் ஒபாமாவை பலமுறை வழி மறித்து கேலியாக பல கேள்விகளை கேட்டார்.
 
அதற்கு, நான் உங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை. கேள்விகளுக்கு பதில் அளிக்க வந்துள்ளேன் என்றார். முன்ரோவின் இந்த செயல் பேட்டியில் பங்கேற்க வந்த மற்ற நிருபர்களை முகம் சுளிக்க வைத்தது. இது குறித்து வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க தலைவர் கரீன்போகன் கூறும்போது, அவரது இந்த நடவடிக்கை அநாகரீகமானது என்றார்.
 
இச்சம்பவம் குறித்து நிருபர் முன்ரோ கூறும்போது, அதிபரை இடைமறித்து பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அவர் தனது கருத்தை விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காகதான் இடைமறித்தேன் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது

வாஷிங்க்டன், அக்.23 உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif