கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் நஷ்டஈடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு || murder car driver family penalty high court order
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் நஷ்டஈடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் நஷ்டஈடு: இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை, ஜூன்.17-
 
புதுக்கோட்டையை சேர்ந்தவர் முகமது சுல்தான். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி 3 பேரை சவாரி ஏற்றி சென்றார். பின்னர் அவர் காருடன் மாயமானார்.
 
இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பையா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில் மாயமான சுல்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் கண்டுபிடிக்க முடியாத வழக்காக அதனை அறிவித்தனர்.
 
இந்நிலையில் சுல்தான் குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தீர்ப்பாயம் சுல்தானின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது.
 
அதில் சுல்தானுக்கு இழப்பீடு தொகை வழங்க கன விபத்து சட்டத்தில் இடமில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஓட்டிச்சென்ற காருக்கும், சாவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தது.
 
இதனை நீதிபதி விமலா ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் சுல்தானுக்கு இழப்பீடு வழங்க முகாந்திரம் உள்ளது. சுப்பையாவிடம் அவர் வேலை செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மதுரவாயல் ராதா அவென்யூ சாலையில் ஆறுபோல் ஓடும் சாக்கடை: 15 ஆண்டுகளாக அவதிப்படுவதாக புகார்

சென்னை, நவ. 30–மதுரவாயல் ராதா அவென்யூ பிரதான சாலையில் சாக்கடை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif