இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால் || Resolute Saina clinches 3rd straight Indonesia Open trophy
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
இந்தோனேஷிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
ஜகார்த்தா,ஜூன்.17-
 
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான சாய்னா, சீனாவின் சுயூரி லி-யை சந்தித்தார். இப்போட்டியில் 13-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் சுயூரியை வீழ்த்தி, சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார். 
 
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சாய்னா சாம்பியன் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். மேலும் இந்த வருடத்தில் சாய்னா வென்றுள்ள 3-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனிலும் சாய்னா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வெற்றி குறித்து பேசிய சாய்னா, ‘போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இங்கே கூடியிருந்த ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். ரசிகர்கள் அளித்த ஆதரவால், ஒவ்வொரு முறை இந்த மைதானத்தில் களமிறங்கும் போதும் நான் சாம்பியனைப் போலவே உணர்ந்தேன்’ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

14 வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியா ஏ அணிக்கு எதிரான ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif