ஐரோப்பிய கால்பந்து: கிரீஸ், செக்குடியரசு கால் இறுதிக்கு தகுதி ரஷியா, போலந்து வெளியேற்றம் || euro football greeze check republic select to quarter final
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
ஐரோப்பிய கால்பந்து: கிரீஸ், செக்குடியரசு கால் இறுதிக்கு தகுதி- ரஷியா, போலந்து வெளியேற்றம்
ஐரோப்பிய கால்பந்து: கிரீஸ், செக்குடியரசு கால் இறுதிக்கு தகுதி- ரஷியா, போலந்து வெளியேற்றம்
வார்சா, ஜுன். 17-
 
14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. `ஏ' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் செக்குடியரசு, போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான போலந்து அணிகள் மோதின. இதில் செக்குடியரசு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் செக்குடியரசு வீரர் பீட்டர் ஜீராக் இந்த கோலை அடித்தார்.
 
இந்த வெற்றி மூலம் செக்குடியரசு கால்இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றியாகும். ஏற்கனவே கிரீஸ் அணியை வென்று இருந்தது. ரஷியாவிடம் தோற்று இருந்தது.
 
இந்த தோல்வி மூலம் போலந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்த அணியால் ஒரு வெற்றிகூட பெற முடியாமல் போனது ஏமாற்றமே.
கிரீஸ், ரஷியா அணிகளிடம் `டிரா' செய்தது.
 
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரஷியா- கிரீஸ் அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஷிய அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. முன்னாள் சாம்பியனான கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கிரீஸ் வீரர் கார்கோனிஸ் இந்த கோலை அடித்தார்.
 
`ஏ' பிரிவில் செக்குடியரசு 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைந்தது. கிரீஸ், ரஷியா அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. கோல்கள் அடிப்படையில் ரஷியா முன்னிலை வகித்தாலும் இரு அணிகள் இடையேயான போட்டியில் கிரீஸ் வெற்றி பெற்று இருந்தது.
இதனால் அந்த அணி 2-வது இடத்தை பிடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
 
ரஷியா 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது. போலந்து 2 டிரா, ஒரு தோல்வியுடன் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
 
செக்குடியரசு அணி கால் இறுதியில் `பி' பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 21-ந்தேதி நடக்கிறது. கிரீஸ் அணி கால்இறுதியில் `பி' பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 22-ந்தேதி நடக்கிறது. `பி' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெர்மனி- டென்மார்க், நெதர்லாந்து- போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.
 
ஜெர்மனி 6 புள்ளிகளுடனும், போர்ச்சுக்கல், டென்மார்க் தலா 3 புள்ளிகளுடனும் உள்ளன. நெதர்லாந்து அணி புள்ளி எதுவும் பெறவில்லை. நெதர்லாந்து அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். அந்த அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். இதே நேரத்தில் ஜெர்மனி அணி டென்மார்க்கை வீழ்த்த வேண்டும் அப்படி நிகழ்ந்தால் மட்டுமே வாய்ப்பில் இருக்க முடியும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.பி.எல். செயல்திறன் வைத்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வது தவறு: டோனி பேச்சு

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif