Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
மம்தாவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வி: திக்விஜய் சிங்
புதுடெல்லி, ஜூன். 17-
 
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தேர்வு தொடர்பாக மம்தா பானர்ஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சில நாட்கள் வரை காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஆதரிப்பதாக கூறி வந்த அவர், கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டார்.
 
அவர் சிலரின் பெயரை பரிந்துரை செய்து, அதில் அவர் பிடிவாதமாக நின்றார். அவரை சமாதானப்படுத்த அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டோம். எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு வளைந்து கொடுத்தோம். எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா?
 
தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால், நாங்கள் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து அவரை நாங்களாக வெளியேற்ற மாட்டோம். அவர் வெளியேற விரும்பினால் அதை தடுக்கவும் மாட்டோம்.
 
மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மதுரையில் அமைதியான வாக்குப்பதிவு: கலெக்டர் சுப்பிரமணியன் பேட்டி

மதுரை, ஏப். 24–மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ....»