1006 ஜோடி இலவச திருமணம்: ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் || 1006 couple free marriage jayalalitha reception
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
1006 ஜோடி இலவச திருமணம்: ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்
1006 ஜோடி இலவச திருமணம்: ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்
சென்னை, ஜூன் 17-
 
இந்து அறநிலையத்துறை சார்பில் திருவேற்காட்டில் நாளை 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.
 
இந்த திருமண விழா நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.
 
1006 புது மண ஜோடிகளும் நாளை காலை பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா 4 கிராம் தங்கத்தாலியுடன் கூடிய மாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். 6 கிராம் வெள்ளி மெட்டியும் வழங்குகிறார்.
 
முன்னதாக மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு ஜரிகை வேட்டி, துண்டு, சட்டையும் வழங்கப்படுகிறது. சீர் வரிசையாக பித்தளை காமாட்சியம்மன் விளக்கு, குங்குமச்சிமிழ், குடம், வாளி, தட்டு, டம்ளர், பாத்திரங்கள், கரண்டிகள், பாய், தலையணை போர்வை உள்பட 21 பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மணமக்களுக்கு வழங்குகிறார்.
 
விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்ககிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வாழ்த்துரை வழங்குகிறார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்க செய்தி துறை செயலாளர் ராஜாராம் நன்றி கூறுகிறார்.
 
இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 1006 ஜோடி திருமணம் நடைபெற உள்ள பந்தல் முகப்பு தோற்றம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. மணமக்களுக்கு வழங்க இருக்கும் சீர்வரிசை பொருட்களும் இன்றே திருவேற்காடுக்கு கொண்டு வரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா திருவேற்காடு செல்வதையொட்டி சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் , அமிஞ்சிக்கரை, கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு வரை வழி நெடுக கொடி, தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளது.
 
மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, அமைச்சர் ரமணா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தொழில் நுட்ப கோளாறால் வீடியோ கான்பரன்ஸ் ரத்து: தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் இன்று மீண்டும் விசாரணை

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 166 அப்பாவி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif