கோட்டாரில் இன்று காலை கொள்ளையடிக்க வந்த வீட்டில் போதையில் தூங்கிய வாலிபர் || Kottar today morning robbery home sleep youth
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்
  • கோலாம்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது பாகிஸ்தான் பாராளுமன்றம்
  • நீலகிரியில் தொடர் மழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பாம்பன் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டம்
  • ஆந்திராவின் புதிய தலைநகர் எது?: இன்று அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு
  • கொல்கத்தாவில் உள்ள சட்டர்ஜி சர்வதேச மைய அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து
கோட்டாரில் இன்று காலை கொள்ளையடிக்க வந்த வீட்டில் போதையில் தூங்கிய வாலிபர்
கோட்டாரில் இன்று காலை கொள்ளையடிக்க வந்த வீட்டில் போதையில் தூங்கிய வாலிபர்
நாகர்கோவில், ஜூன்.17-
 
நாகர்கோவில் கோட்டார் கம்பளம் கன்னக்குடி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுசீந்திரத்திலும் ஒரு வீடு உள்ளது. கன்னக்குடித்தெருவில் உள்ள வீட்டில் அவரது தாத்தா, பாட்டி வசித்து வந்தனர்.
 
நேற்று இரவு கண்ணனின் தாத்தாவும், பாட்டியும் வீட்டில் தூங்கினர். இன்று காலை அவர்கள் விழித்தெழுந்து பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் வாலிபர் ஒருவர் போதையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
 
வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து அவர் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தாத்தாவும், பாட்டியும் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். அந்த பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த வாலிபரை எழுப்பி விசாரித்தனர்.
 
நள்ளிரவில் கொள்ளையடிக்க புறப்பட்டபோது போதை ஊசி போட்டுக் கொண்டு போதை மாத்திரை சாப்பிட்டதாகவும், ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியதும் போதை அதிகமாகியதால் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
 
இதைக்கேட்டு பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
 
முதலில் தனது சொந்த ஊர் மதுரை என்றும், நாகர்கோவில் மீனாட்சிபுரம் என்றும் கூறிய அவர் கடைசியில் கன்னியாகுமரி அருகே உள்ள கிராமம் என தெரிவித்தார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரிக்கிறார்கள். மேலும் அவருடன் தொடர்புடைய 4 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
 
இதுதவிர கொள்ளையன் பயன்படுத்திய போதை ஊசி மற்றும் மாத்திரை யார் மூலம் சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி