நில அபகரிப்பு புகாரில் கைதான தி.மு.க. செயலாளர் கோ.தளபதிக்கு ஜாமீன் || land acquisition case arrest dmk secretary thalapathi bail
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
நில அபகரிப்பு புகாரில் கைதான தி.மு.க. செயலாளர் கோ.தளபதிக்கு ஜாமீன்
நில அபகரிப்பு புகாரில் கைதான தி.மு.க. செயலாளர் கோ.தளபதிக்கு ஜாமீன்
மதுரை, ஜூன். 17-
 
மதுரை பசுமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி மற்றும் வெங்கடேசன், ரவிச்சந்திரன், மலையரசன் ஆகியோர் கடந்த மாதம் மதுரை புறநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  
 
கைதான 4 பேரும் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் கோ.தளபதி பாளையங்கோட்டை சிறையிலும், மற்றவர்கள் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  
 
இந்நிலையில் தளபதி உள்பட 4 பேரின் சார்பில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 4 பேரும் தினமும் மதுரை கோர்ட்டில் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனை தொடர்ந்து 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை